உள்நாடு

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

(UTV | கொழும்பு) – பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், தற்போது அச்சிடப்படும் பணத்தின் அளவை இலங்கை மத்திய வங்கி குறைத்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பணத்தை அச்சிடும் நடைமுறை புதிய விடயமல்ல. அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச அரசாங்கங்களும், குறிப்பாக நெருக்கடியான காலங்களில் இந்த முறையை நாடுகின்றன.

எனினும், இந்த முறையை நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியாது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்க தற்போது மாற்று வழிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்