உள்நாடு

நிதியமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நோட்டீஸ்

(UTV | கொழும்பு) – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ வகிக்க முடியாது என தெரிவித்து உலப்பனே சுமங்கல தேரர் தாக்கல் செய்த வழக்கிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இது தொடர்பான நோட்டீஸை கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன், குறித்த மனுவை வரும் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related posts

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் இலங்கை தூதரகம் கோரிக்கை

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது

திங்கள் முதல் 4வது கொவிட் தடுப்பூசி வழங்கப்படும்