உள்நாடு

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமானப்பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த முதலீட்டில் உள்ளடங்குகின்றது.

இந்த கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக கொரோனா நோயாளிகள் பதிவு

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]