விளையாட்டு

நோவக் ஜோகோவிச் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

(UTV |  மெல்போர்ன்) – விசா இரத்து விவகாரத்தில் அவுஸ்திரேலியாவில் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், அவுஸ்திரேலிய பயணத்திற்கு முன்பு சமர்ப்பித்த ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவுஸ்திரேலிய பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தில் 14 நாட்களுக்கு முன்னர் எவ்வித வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை என ஜோகோவிச் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி ஸ்பெயினில் பயிற்சி மேற்கொண்டதாக புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் போது தான் தவறான தகவல் வழங்கியதாக நோவக் ஜோகோவிச் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேற்கோள்காட்டி தெரிவிக்கின்றன.

Related posts

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி

ஆசிய கிண்ணம் : ஆப்கானிஸ்தானுக்கு அபார வெற்றி

சச்சினை நெருங்கும் விராட் கோலி?