உள்நாடு

ஒரு மணி நேர மின் வெட்டு இரத்து

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால் இன்று முன்னர் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வலய ரீதியாக இன்று (12) மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என ஏலவே மின்சக்தி அமைச்சு தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் கைதிகள் 43பேர் மீளவும் அந்நாட்டுக்கு

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் அறிவித்தல்

மேல்மாகாணத்தில் 404 பேர் கைது