(UTV | கொழும்பு) – அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை ஒன்றில்லாது செயற்படுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் பேசுகையில்;
“…. இவர்களிடம் சர்வதேச கொள்கையும் இல்லை அவர்களுக்கென்ற ஒரு தனியான கொள்கையும் இல்லை. அரசாங்கம் சீனாவின் பின்னால் செல்லும் போது ஏனைய அரசியல் தரப்பினர் மகிழ்சியாக இல்லை. அவர்களை திருப்திப்படுத்தவே சில செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தற்போது இலங்கை கடற்படையினர் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜப்பான் இந்தியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் ஒரே கொள்கையில் செயற்படுகின்றனர். ஆனால் சீனா வேறு கொள்கையில் உள்ளவர்கள். எனவே அரசாங்கம் உண்மையில் இரு தரப்பையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றது…’