உள்நாடு

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில்

(UTV | கொழும்பு) – பொது இடங்களுக்கு பிரவேசிப்போர் கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், பூஸ்டர் எனப்படும செயலூக்கி தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர், முதல் 3 மாதங்களில் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த தடுப்பூசி செலுத்தல் மூலம் பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக வெளியான தகவல் இதுவரை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம் 

நடந்து சோழன் உலக சாதனை படைத்த 15 வயது மாணவி!

கொரோனா எதிரொலி – பொரள்ளையில் ஆறு கடைகளுக்கு பூட்டு