உள்நாடு

அடையாள பணிப்புறக்கணிப்பில் தென் மாகாண சுகாதார ஊழியர்கள்

(UTV | கொழும்பு) – தென் மாகாணத்தில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர்கள் இன்று (05) அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (05) காலை 7 மணி முதல் நாளை (06) காலை 7 மணி வரை பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வுகள் உரிய முறையில் வழங்கப்படாதமையால் சுமார் 13,000 தாதியர்களுக்காக பதவி உயர்வுகள் இல்லாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைகள், அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தென் மாகாணத்திலுள்ள 09 ஆதார வைத்தியசாலைகள், அனைத்து பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 47 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் சுகாதார ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காலப்பகுதியில் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என காதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

புதுவருட கொவிட் கொத்தணியில் 2,142 பேர் சிக்கினர்

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் – ரிஷாத் இடையே சந்திப்பு