கிசு கிசு

அமைச்சுப் பதவியை ஏற்க மறுக்கும் ‘சமல்’

(UTV | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை அமைச்சர் சமல் ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது , விவசாயத்துறை அமைச்சை தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவுக்கு வழங்க ஜனாதிபதி உத்தேசித்திருந்தார்.

“உழவு இலங்கை பயிர் செய்கை போர்” திட்டத்தை அவரின் தலைமையில் செயற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் விவசாயத்துறை அமைச்சை ஏற்க சமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சராக செயற்படும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரந்துலா குணவர்தனவின் திருமண கிளிக்ஸ் [PHOTOS]

புஷ்பா ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறினார்

கொழும்பு வரும் மக்களுக்கான விசேட அறிவித்தல்