உள்நாடு

புதிய ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(0 3) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது

மேலும், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

Related posts

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

லிட்ரோ எரிவாயுவின் மாவட்ட ரீதியான விலை பட்டியல்