(UTV | கொழும்பு) – உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ம் திகதி துபாய் செல்லவுள்ளார்.
ஜனவரி 3 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் மற்றும் துபாய் அரச தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.