(UTV | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11,47,770 டோஸ் பைசர் தடுப்பூசி தொகை தடுப்பூசி இன்று (28) அதிகாலை 12.29 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் இந்த சரக்கு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விசேட குளிர்பதன வசதிகள் பொருத்தப்பட்ட லொறிகள் மூலம் இந்த தடுப்பூசிகளை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.