உள்நாடு

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களின்படி, இந்த இசை நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வியாழன் வரை மாலை 06 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை நடத்த முடியும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 06 மணியிலிருந்து அதிகாலை 1.00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06 மணியிலிருந்து நள்ளிரவு 12.30 மணி வரை நடத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கோப் – கோபா குழுக்கள் முதல் முறையாக இன்று கூடுகின்றன

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது