விளையாட்டு

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது

(UTV | கொழும்பு) – சிம்பாப்வே கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ள சிம்பாப்வே அணி, 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணியுடன் மோதவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள அனைத்து போட்டிகளும் உயிர்குமிழி முறையின் கீழ், கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

முதலாவது போட்டி ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், மற்றைய இரு போட்டிகளும் ஜனவரி 18 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

Related posts

அவுஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றி

மெஸ்ஸியின் ஒப்பந்தம் 4,000 கோடியை தாண்டியது

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்