(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ‘லிட்ரோ கேஸ் நிறுவனம்’ அறிவித்திருக்கிறது.
சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு மேலதிகமாக புதிதாக இன்னும் சில பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதேவேளை, சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.