உள்நாடு

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்? – இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன், ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் இன்று(27) தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்குரிய தீர்வு எட்டப்படாதவிடத்து, உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று நள்ளிரவு முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவிருந்த நிலையில், அதனை இன்றைய தினம்வரையில், ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் பிற்போட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம், பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து தொடர்ந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))

அரச அலுவலகங்களில் வேலைவாய்ப்பு இல்லை – திறைசேரி அறிவிப்பு!