உள்நாடு

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்திற்கு இலங்கையர்

(UTV | கொழும்பு) –  பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவிக்கு, மற்றுமொரு இலங்கையரை நியமிக்க தொழிற்சாலையின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

சியால்கோட் சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த பிரபல இஸ்லாமிய போதகர் மௌலானா தாரிக் ஜமீலுடன், சமய நல்லிணக்கத்திற்கான பாக். பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அஷ்ரபி,

பிரியந்த குமாரவின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை தொழிற்சாலை உரிமையாளரே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கை பிரஜை ஒருவருக்கு தொழிற்சாலையில் வேலையும் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

தொழிற்சாலையின் புதிய மேலாளரான இலங்கையரின் பெயரையோ அல்லது பிற விவரங்களையோ அவர் வழங்கவில்லை.

மத நிந்தனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 3ம் திகதி இலங்கையரான பிரியந்த குமார தியவடனவை, நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்திருந்ததுடன், சடலத்தை தீக்கிரையாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவு – அமைதி காலம் அமுலில்

editor

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து