(UTV | கொழும்பு) – நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர்க் கட்டணங்களையும் உயர்த்த நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் நீர்க் கட்டணங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர்க் கட்டணங்களை உயர்த்த நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். நீர்க் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.