உள்நாடு

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கான தீர்வு பெரும்பாலும் இன்றைய தினம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையில் நேற்று (22) இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

வைத்தியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 24 மணிநேரம் கால அவகாசத்தை குறித்த சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் சுகாதார அமைச்சர் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சு மட்டத்தில் இன்று கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது பெரும்பாலும் வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதிக்கு பூட்டு

கேரளாவில் பரவும் கொரோனா வைரஸ் – இலங்கைக்கும் எச்சரிக்கை