உள்நாடு

புதிய இராஜதந்திரிகள் 17

(UTV | கொழும்பு) – புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, ஹங்கேரியா, மொரிடானியா, தூனிசியா, ஆர்ஜென்டினா, டொமினிக் குடியரசு, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சியெரா லியோன், ருவாண்டா, பொஸ்ட்வானா, மோல்டா, கயானா குடியரசு மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிய நியமனங்களைப் பெற்றுள்ளனர்.

1. சியெரா லியோன் உயர்ஸ்தானிகராக எர்னஸ்ட் மைம்பா (Ernest Mbaimba)

2. ஜோர்தான் தூதுவராக மொஹமட் எல்-கைட் (Mohamed El- Kayed)

3. கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் தூதுவராக சோய் ஹுய் சோல் (Choe Hui Chol)

4. ருவாண்டாவின் உயர்ஸ்தானிகராக திருமதி முகங்கிரா ஜாக்குலின் (Mukangira Jacqueline)

5. பொஸ்ட்வானாவின் உயர்ஸ்தானிகராக கில்பர்ட் ஷிமேன் மெங்கோல் (Gilbert Shimane Mangole)

6. மோல்டாவின் உயர்ஸ்தானிகராக ரூபன் கௌசி (Reuben Gauci)

7. ஹங்கேரியாவின் தூதுவராக அண்ட்ரெஸ் லஸ்லோ கைரலி (Andras Laszlo Kiraly)

8. மொரிடானியாவின் தூதுவராக மொஹமட் அஹ்மத் ராரா (Mohamed Ahmed Rara)

9. தூனிசியாவின் தூதுவராக திருமதி ஹயத் தல்பி பிலேல் (Hayet Talbi Bilel)

10. ஆர்ஜென்டினாவின் தூதுவராக ஹியூகோ ஜேவியர் கோபி (Hugo Javier Gobbi)

11. கயானா குடியரசின் உயர்ஸ்தானிகராக சர்ரண்டாஸ் பெர்சாட் (Charrandass Persaud)

12. எகிப்தின் தூதுவராக மகெட் மொஸ்லே நஃபீ (Maged Mosleh Nafei)

13. டொமினிகா குடியரசின் தூதுவராக டேவிட் இம்மானுவேல் பக் (David Emmanuel Puig)

14. நைஜீரியாவின் உயர்ஸ்தானிகராக அகமத் சுலே (Ahmed Sule)

15. இந்தோனேசியாவின் தூதுவராக திருமதி டேவி கஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing)

16. ஸ்பெயினின் தூதுவராக ஜோஸ் மரியா டொமிங்குஸ் (Jose Maria Dominguez)

17. ஸ்லோவேனியாவின் தூதுவராக திருமதி மாதேஜா கோஷ் (Mateja Ghosh)

Related posts

பஸ் கட்டணம் குறைக்கப்படாது

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

கடுகண்ணாவில் காணாமல்போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு !