உள்நாடு

நாடளாவிய ரீதியாக பல பகுதிகளில் மின்தடை

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் தடைபடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்த காரணத்தினால் நாடாளவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.

இந்நிலைமையை சீர் செய்வதற்கு சுமார் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலார்கள் சங்கம் மற்றும் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கங்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த மின்வெட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையில் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அதன் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மார்ச் முதலாம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டம்

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு உள்நுழையும் வீதிகளுக்கு பூட்டு, பலத்த பாதுகாப்பு