உள்நாடு

பேருந்து கட்டணம் 25% இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திடமிருந்து எரிபொளுக்கான நிவாரணம் கிடைக்காவிடத்து பேருந்து கட்டணத்தை 25 சதவீதத்தினால் அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆரம்ப பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கடந்த முறை எரிபொருள் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டபோது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

தற்போது 10 ரூபாவால் அந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் மாத்திரமின்றி பேருந்துக்கான உதிரிப்பாகங்களின் விலைகளும் 300 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் தலையீட்டுடன் முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

நிவாரணம் வழங்கப்படாவிடத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Related posts

​தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

சுகாதார குடியேற்றக் கொள்கைகளைத் தயாரிக்க மாலைத்தீவின் ஒரு குழு நாட்டுக்கு