உள்நாடு

நாடு தழுவிய ரீதியில் GMOA தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – நாளை (21) காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

Related posts

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கம்

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

TNA உறுபினர்களுடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு