உள்நாடு

கப்பல்களிலுள்ள லிட்ரோ நிறுவன எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு

(UTV | கொழும்பு) –  கெரவலப்பிட்டி கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டு கப்பல்களில் உள்ள சமையல் எரிவாயுவின் மாதிரிகள் நேற்று பெறப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன குறித்த மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளன.

உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் 75 சதவீதமான சமையல் எரிவாயு கொள்கலன்கள் லிட்ரோ நிறுவனத்திற்குரியதாகும்.

குறித்த நிறுவனம் முன்னதாக இரண்டு கப்பல்களில் இறக்குமதி செய்த சமையல் எரிவாயு தரம்குறைந்தவை என ஆய்வில் தெரிய வந்தது.

இதனையடுத்து அதனை கப்பலில் இருந்து தரையிறக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தடை விதித்திருந்தது.

இந்தநிலையில், கெரவலப்பிட்டி கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டு கப்பல்களின் மாதிரிகளில் சமையல் எரிவாயுவின் தரம் உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அதனை தரையிறக்குவதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உலக வங்கி உதவத் தயார்

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…