உள்நாடு

முதலாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் தவணைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முடிவடைந்து மீண்டும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

5 புலமைப்பரிசில் ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதத்திலும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சனிடம் நலன் விசாரிக்க பா.உறுப்பினர்கள் வெலிக்கடை விஜயம்[VIDEO]

திங்கள் முதல் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தும் நெருக்கடியில்

புத்தளம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை