(UTV | கொழும்பு) – ஒமைக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஏற்கனவே பரவியுள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் திரிபு 77 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் பலருக்கு இந்த தொற்று கண்டறியப்படவில்லை என்றும், முன்னர் இல்லாத விகிதத்தில் இந்தத் திரிபு பரவுவதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரல் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரொன் திரிபை குறைத்து மதிப்பிடப்படுகின்றமை தொடர்பில் தாம் கரிசனை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக இந்த வைரஸின் ஆபத்தை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதை தாம் கற்றுக்கொண்டதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரொன் திரிபு, குறைவான கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையினாலான தொற்றுக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, முன்னாயத்தமில்லா சுகாதாரக் கட்டமைப்பு இதனால் கடுமையாக பாதிப்படையக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் எச்சரித்துள்ளார்.