உலகம்கேளிக்கை

21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் இந்தியாவுக்கு

(UTV |  இந்தியா) – 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். இந்நிலையில். 21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடந்த கண்கவர் போட்டியில் அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்’பாக பராகுவே அழகியும், 2வது ரன்னர் அப்’பாக தென் ஆப்பிரிக்க அழகியும் தேர்வாகியுள்ளனர்.

ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1994 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூயுனிவெர்ஸ் போட்டியில் சுஷ்மிதா சென் முதன்முறையாக மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி என்ற பெருமையைப் பெற்றார்.

அதன் பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா அந்தப் பட்டத்தை வென்றார். இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

Related posts

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் ஹன்சிகா…

பிரபல நடிகை செய்த காரியம்…

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ்