உள்நாடு

தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) –   சேவை முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று (13) முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

இன்று (13) பிற்பகல் 4 மணி முதல் நாளை (14) நள்ளிரவு வரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் என தபால் மற்றும் மின்சார கட்டமைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தபால் திணைக்கள சேவையில் பாரிய குறைபாடுகளுள்ள போதிலும் அவை இன்னும் தீர்க்கப்படாதுள்ளன.

2006 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின் படி சேவை முரண்பாடு பாரியளவில் உள்ளது.

திணைக்களத்தின் சில பணிகள் வேறு திணைக்களத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே இவ்வாறான பல பிரச்சினைகளுக்கான தீர்வினை கோரியே குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக அஞ்சல் மற்றும் மின்சார கட்டமைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்