உள்நாடு

“பொடி லெசி” தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   பாதாள உலகக் குழுத் தலைவன் “பொடி லெசி” தடுப்புக் காவலின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொடி லெசிக்கான தடுப்புக் காவல் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அவருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனுவை பிப்ரவரி 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்