உள்நாடு

காணாமல் போன ஐந்து சிறுமிகளில் ஒருவர் அடையாளம்

(UTV | கொழும்பு) – வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறுமிகள் சிறுவர் இல்லத்திற்கு அருகிலுள்ள கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் நேற்று மதியம் வரை சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியானால் அம்பாறையில் இனவாதம் அற்ற முறையில் சேவையாற்றுவேன் – சம்மாந்துறையில் சஜித்

‘பொடி மெனிகே’ தடம்புரண்டதில் மலையக ரயில் சேவைகளில் தாமதம்

‘ஒரு நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து தெளிவுபடுத்தல்