உள்நாடு

இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

(UTV | கொழும்பு) –   இலங்கை இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு அமைய, இலங்கை இராணுவ படைகளின் 59 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே இன்று (07) முதல் கடமைகளை முன்னெடுக்கவுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னதாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவி வகித்திருந்தார்.

இலங்கை இராணுவப் படைகளின் 58 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டார்.

Related posts

புதிய அரசே தற்போதைய தேவை – லக்‌ஷ்மன் கிரியெல்ல

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு