உலகம்

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

(UTV | மியன்மார்) – பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மார் நாட்டின் என்.எல்.டி. கட்சியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தூண்டுதல் மற்றும் இயற்கை பேரிடர் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டது.

அவர் மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்திலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

76 வயதுடைய ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது

முதன்முறையாக பைடன் வெற்றியை ஒப்புக் கொண்ட ட்ரம்ப்