உலகம்

ரஷ்யாவை அச்சுறுத்தும் பைடன்

(UTV | வொஷிங்டன்) – உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா மிகவும் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் எல்லைக்கு அருகே சுமார் 94 ஆயிரம் படையினரை ரஷ்யா குவித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது.

2022-ம் ஆண்டின் தொடக்கத்தில், சுமார் 1,75,000 படையினரை பயன்படுத்தி பெரும் தாக்குதல் மூலம் உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை தடுக்கும் வகையில் அவருடன் நீண்ட ஆலோசனை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புடின் – பைடன் இடையே அடுத்த வாரம் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க, அமெரிக்காவும் உக்ரைனும் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

Related posts

மாலைதீவை தாக்கியது கொரோனா

மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்!

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!