கிசு கிசு

டிசம்பர் இறுதியில் பொது முடக்கம்

(UTV | கொழும்பு) – பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளலாம். எனவே இம்மாத இறுதியில் பொாது முடக்கம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவதற்கு ஆராய்ந்து வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் மீண்டும் உலகை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் டிசம்பர் மாத காலப்பகுதியானது கிறிஸ்தவர்களின் பெரும் பண்டிகைக் காலமாக கருதப்படுகின்றது.

பாலன் பிறப்பு மற்றும் புதுவருடப்பிறப்பு என கொண்டாட்டம் நிறைந்த காலம் என்பதால் பொது முடக்கம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவதற்கு அரச உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஹர்பஜனுக்கு அகவை 40

விமலின் முதல் கண்டுபிடிப்புக்கே ஆப்பு

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?