உள்நாடு

குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை கோரும் CEB பொறியியலாளர்கள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் மின்துண்டிப்பை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின், இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 3 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதனையடுத்து 4 நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில், மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையிலான காலப்பகுதிக்குள், ஒரு மணிநேரம் மின் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில், குறித்த நான்கு நாட்களுக்குள் இந்த நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் முக்கிய மின்னுற்பத்தி நிலையம் ஒன்று செயலிழந்ததால் மக்களுக்கான மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

எமக்கு கிடைக்கும் நிதியானது கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது