உள்நாடு

கட்டுப்பாட்டு விலையில் தேங்காய் எண்ணெய்

(UTV | கொழும்பு) –  சந்தையில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்த இறக்குமதியாளர்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் பண்டிகை காலத்தில் தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தையில் விநியோகிக்கப்படலாம் எனவும் குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.550 முதல் ரூ.580 வரை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்காக, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், தேங்காய் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டு விலையை விதிக்கும் தீர்மானத்துடன் ஒரு போத்தல் ரூ.400-450க்கு இடையில் விற்பனை செய்யப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்

அமைச்சுப்பதவிகளில் மாற்றம்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு