உள்நாடு

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும் வரை மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் சில பிரதேசங்களுக்கு ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய நாடளாவிய மின் தடையின் பிற்பாடு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மொ​ஹாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை ஏலவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்