உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) –    நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஏலவே, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்தினூடாக நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு சட்டமா அதிபர் தரப்பால் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்