உலகம்

அமெரிக்காவிலும் OMICRON

(UTV | வொஷிங்டன்) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமிக்ரோன் குறித்தும், அதன் பரவல் பாதிப்பு குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் திகதி முதல்முறையாக ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டவுடன் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. ஆனால், தற்போது அமெரிக்காவிலும் ஒமிக்ரோன் புகுந்துவிட்டது.

அமெரிக்காவில் டெல்டா வைரஸின் பாதிப்பே இன்னும் முழுமையாகச் சரியாகாத நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணத்தை சீனா விமர்சிப்பு

ட்ரம்ப் குடும்பத்தை விட்டு விலக மறுக்கும் கொரோனா

இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!