உள்நாடு

குற்றமற்றவராக கருதி அசாத் சாலி விடுதலை 

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றமற்றவராகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இன, மத சீர்குலைவை ஏற்படுத்தும், வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாகக் கூறி, பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்க செய்யப்பட்ட வழக்கின் மனுதாரர் தரப்பு விசாரணைகள் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி நிறைவடைந்திருந்தன.

இந்நிலையில், இவ்வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான அசாத் சாலியை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டார்.

Related posts

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்க இராணுவத்தினர்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,356 பேர் கைது