உள்நாடு

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

(UTV | கொழும்பு) – நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நியமனக் கடிதம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் புதிய தலைவரிடம் இன்று (01) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராகவும் நீல் டி அல்விஸ் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வியாழன் முதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம்

எங்கிருந்தாலும் உடனுக்குடன்..

சீனி பிரச்சினைக்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்க்கும் இறக்குமதியாளர்கள்