உலகம்

புதிய கொவிட் வைரஸ் புறழ்வாக OMICRON

(UTV |  ஜெனீவா) – தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட் வைரஸ் புறழ்விற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பிறழ்வானது, தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாதது என கண்டறியப்பட்டுள்ளது.

B.1.1.529 என்ற இந்த வைரஸ பிறழ்வு தொடர்பான தகவல், முதல் தடவையாக கடந்த 24ம் திகதியே உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

கடந்த 9ம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாகவே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா பிறழ்வை போன்றே, இதுவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் இந்த வைரஸ் தற்போது பரவி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சீனாவில் மீளவும் ஊரடங்கு

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு