உள்நாடு

மழையுடனான காலநிலை தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனையில் இன்றும் வளர்ச்சி

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்டு தீர்மானமெடுங்கள் – பிரதமர் ஹரினி

editor

வெள்ளியன்று மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்