உலகம்

மார்ச் 2022-க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம்

(UTV | ஜெனீவா) – ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வரும் மார்ச் 2022க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு 53 நாடுகளை ஐரோப்பிய பிராந்தியமாக வகைப்படுத்தியுள்ளது.

அப்பிராந்தியத்தில் ஏற்கனவே 15 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வரும் மார்ச் 2022-க்குள் 52 நாடுகளில் 49 நாடுகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகக்கடுமையான அல்லது மோசமான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என கணித்துள்ளது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்படும் உயிரிழப்புகளின் முக்கிய காரணியாக கொரோனா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுக்கும் கட்டாய தடுப்பூசித் திட்டம், ஊரடங்கு போன்றவைகளை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்திலும் அவசர நிலை பிரகடனம்

கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு- 4 பேர் உயிரிழப்பு