உள்நாடு

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு கொழும்பு மூவரடங்கிய நிரந்த நீதாய நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் முதலில் வாசிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகளான நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகவும் 855 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவ்வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

கொரோனா எதிரொலி – பொரள்ளையில் ஆறு கடைகளுக்கு பூட்டு

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்திக்கு அனுமதி.

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!