(UTV | கொழும்பு) – வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சபையில் இருக்குமாறு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த 13 ஆம் திகதி தொடங்கிய இந்த விவாதத்தின் ஏழாவது நாள் இன்றாகும். வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நாளை(23) ஆரம்பமாகி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.