உள்நாடு

அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர்

(UTV | கொழும்பு) – இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று (22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு தொடர்பில் குற்றச்சாட்டு

கண்டி நகர பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமனம்