உள்நாடு

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பெரும்போக செய்கைக்கு தேவையான தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயன , பொருள்களுக்கு அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உரிய தரத்துடன் குறித்த பொருள்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

இந்த பெரும்போகத்திலேயே அதிகமானவர்கள் விவசாய செய்கைகளில் ஈடுபடுவர். நெல், சோளம், மரக்கறி மற்றும் பெருந்தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த பெரும்போகத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச உற்பத்திகளைப் பெற்று உணவு பாதுகாப்பைப் பெறுவதே எமது முதலாவது நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள அவர், அதற்காக அரச கொள்கைக்கு அமைவாக நாம் செயற்படுகிறோம் என்றார்.

Related posts

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்

எமது கட்சியில் அலி சப்ரி, இசாக், முசரப் ஆகியோர் நிச்சயமாக வேட்பாளராக இருக்க மாட்டார்கள் – ரிஷாட் பதியுதீன்

editor

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor