(UTV | கொழும்பு) – கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(20) காலை வெடிப்பு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
பழைய குதிரை பந்தய திடலின் பார்வையாளர் அரங்கின், கீழ் தளத்தில் அமைந்துள்ள சர்வதேச உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான உணவு விடுதியில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் வெடிப்பு சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தினால் எவருக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லையெனக் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.