உள்நாடு

மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று (19) முதல் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

Related posts

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் உண்டு

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது